மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17,596 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சேலம்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,445 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்றுவிநாடிக்கு 17,596 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்துடெல்டா பாசனத்துக்கு வெளியேற் றப்படுவது விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 89.26 அடியாக இருந்த நிலையில், நேற்று89.92 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 52.55 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் 17,000 கனஅடி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக பதிவானது. அன்றுமதியம் 1 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. எனவே, அன்று மதியம் முதல் ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நேற்று காலை அளவீட்டின் போதும் நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவு14 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்