கடலூர்: தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம், கடலுக்குச் சென்றுள்ள படகுகள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும். மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 49 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலூர் துறைமுகம் வழியாகவும், பரங்கிப்பேட்டை, சாமியார் பேட்டை, சின்னூர், கிள்ளை, புதுப்பேட்டை, முடசல் ஓடை உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராம மீனவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள்.
தற்பொழுது தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையடுத்து, கடலூர் மாவட்ட மீன்வளத்துறை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து கடலூர் மீன்வளத்துறை சார்பில் இன்று (அக்.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவகியுள்ளதால் கடல் பகுதிகளில் 45 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம். கடலில் உள்ள மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்கு திரும்பிட வேண்டும், மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago