திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, மும்மொழிக் கொள்கைக்கு வழி வகுப்பதாகவும், இந்தி திணிப்பை வலியுறுத்துவதாகவும் உள்ளது.
மேலும், 3, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இதனால், பள்ளிக்கல்வி படுமோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்ற அச்ச உணர்வு நீடிக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. உள்ளாட்சித் தொகுதிகள் மறு வரையறை என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவமும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளதா என்பதைப் பார்க்கவேண்டியுள்ளது. தற்போது செய்யப்பட்டுள்ள மறு வரையறையில், பல இடங்களில் முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள்ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம்.
இது தொடர்பாக தமிழக அரசின் மறு வரையறைக் குழுவிடம், எங்களது கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். இதுகுறித்து சட்டப்பேரவையிலும் பேச உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago