காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, 15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 3 நாட்களில்விலக உள்ளது. இந்தநிலை யில், தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு, வடகிழக்குதிசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கத்தால், தென்னிந்திய பகுதி களில் வடகிழக்கு பருவமழை வரும் 15 அல்லது 16-ம் தேதி தொடங்கக் கூடும்.

தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 14ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு, வடமேற்குதிசை யில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதன் பின்னர் 48 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களி லும், 17, 18, 19-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை ஆகிய டெல்டா மாவட் டங்கள், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை கனமழையும் பெய்யக்கூடும். மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

15-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட் டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 16 செ.மீ. சிவகங்கை மாவட்டம் திருப்பு வனத்தில் 14 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மதுரை தல்லாகுளம், பெரியபட்டி, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு, ராமநாதபுரம் மாவட் டம் ராமேசுவரத்தில் 12 செ.மீ., மதுரை வடக்கில் 11 செ.மீ., விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், அருப்புக் கோட்டை, திருச்சி மாவட்டம் பொன்னையார் அணை, மதுரை மாவட்டம் தானியமங்கலம், மேட்டுப்பட்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் 14, 15-ம் தேதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்திலும், 16, 17-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளை குடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோர பகுதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை: வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் களமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்