விதிகளை மீறி இயங்கிய பேருந்துகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறை காரணமாக பெங்களூருவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10-ம் தேதி முதல்சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தமிழக எல்லையான ஜுஜுவாடி முதல் ஓசூர் பேருந்து நிலையம் வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 18 ஆம்னி பேருந்துகளில் உரிய ஆவணங்கள் இல்லாததும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பேருந்துகளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், ரூ.2.37 லட்சம் அபராதம், ரூ.27 லட்சம் வரி விதித்தனர். மேலும், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 71 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.17 லட்சம் அபராதம், ரூ.9.71 லட்சம் வரி விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்