சென்னை: வங்கக்கடலில் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று (அக்.12) காலை முதல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு.. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் கரூர் திருச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை கடலூர் மயிலாடுதுறை ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திண்டுக்கல் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் வருகிற 14 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago