கோவை: மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று (அக்.12) காலை சென்று கொண்டிருந்த 'ஃப்ளை துபாய்' நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 7. 45 மணியளவில் கோவையில் விமானம் தரையிறங்கியது. வானிலை சீரடைந்த நிலையில் மீண்டும் காலை 10 மணி அளவில் கோவையில் இருந்து விமானம் கோழிக்கோடு புறப்பட்டு சென்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago