தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வீட்டு வேலை பார்த்து வந்த பெண் அதே வீட்டில் 70 பவுன் நகைகள், ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார்.
இதுதொடர்பாக, போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த அப்துல் சலாம் மனைவி வாவு பாத்திமுத்து (78). இவருக்கு இரு மகன்கள். வெளிநாட்டில் நகைக்கடை வைத்துள்ளனர். அப்துல் சலாம் இறந்து விட்டார். வாவு பாத்திமுத்து அவரது உறவினர் அப்துல் கப்பாருடன் (80) வசித்து வருகிறார்.
இவர்களுக்கு துணையாக காயல்பட்டினம் பெரிய நெசவு தெரு முஸ்தபா மனைவி முத்து கதீஜா (49) கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தினமும் சமையல் செய்து கொடுத்து விட்டு இரவில் அங்கேயே தங்கி விடுவாராம். ஞாயிற்றுக்கிழமை பாத்திமுத்து பணி செய்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டாராம். அப்போது வாவு பாத்திமுத்து வீட்டில் தங்க நகைகள் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்த பணம், நகைகள் குறைவாக உள்ளதை அறிந்து அவரது மகன்களிடம் விசாரித்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் வீட்டில் வேலை பார்த்த கதீஜாவிடம் போலீஸார் விசாரணை செய்ததில், வாவு பாத்திமுத்து வீட்டில் அவர் அவ்வப்போது நகைகள் திருடியது தெரிய வந்ததாம். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து 70 பவுன் தங்க நகைகளும், ரூ. 2 லட்சமும் மீட்கப்பட்டன. போலீஸார் கதீஜாவை கைது விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago