நவராத்திரி விழாவுக்கு யானை வருகிறது: கன்னியாகுமரி கோயிலில் ஆய்வு செய்த வனத்துறையினர் உறுதி

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்கு புனித நீர் எடுத்துச் செல்வதற்கும், பிற வழிபாடுகளுக்கும் யானை வழங்காததைத் கண்டித்து பக்தர்கள் இரவில் கோயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பக்தர்களுக்கு ஆதரவாக இன்று கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு இன்று பிற்பகலில் வனத்துறை குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் கோயில் வளாகத்திற்குள் இருந்த யானை கட்டும் கூடம், யானைக்கு உணவுகள் தயார் செய்யும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் நாளைக்குள் யானை நவராத்திரி விழாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் பக்தர்கள், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

போராட்டம் ஏன்? கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாள் நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின்போது மன்னர்கால பாரம்பரிய முறைப்படி விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் சர்க்கரை தீர்த்தக் கிணற்றிலிருந்து புனித நீர் யானை மீது வைத்து எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். சாமி ஊர்வலத்திற்கும் யானை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கடந்த வைகாசி திருவிழாவுக்கு யானை வரவழைக்கபடவில்லை. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நவராத்திரி திருவிழாவுக்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத் துறை இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இவ்விழாவுக்கும் யானை வரவில்லை. இதனால் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் நவராத்திரி திருவிழாவின்போது பாரம்பரிய முறைப்படி யானை மீது புனித நீர் எடுத்து செல்ல முடியவில்லை.

இதை கண்டித்து கடந்த 7ம் தேதி கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் பக்தர்கள், மற்றும் கிராம மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் 48 கிராமங்களைச் சேர்ந்த ஊர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென ஏராளமான பக்தர்கள் பகவதியம்மன் கோயில் முன்பு திரண்டனர். அவர்கள் நவராத்திரி விழாவுக்கு உடனடியாக யானையை வரவழைத்து பூஜை முறைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அறநிலையத் துறையினர், வனத் துறையிடம் அனுமதி பெற்று யானையை பகவதியம்மன் கோயிலுக்கு வரவழைத்து விழாவில் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் இன்று மதியம் வரை பகவதியம்மன் கோயிலுக்கு யானை வரவில்லை. இதனால் இந்து அறநிலையத் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் தங்களை ஏமாற்றுவதாக கூறி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பக்தர்கள் அறிவித்தனர். அதற்கு வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இன்று கன்னியாகுமரி கடற்கரை, காந்தி பஜார், பார்க் வியூ பஜார், சன்னிதி தெரு போன்ற பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளைக்குள் யானை நவராத்திரி விழாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதனால் பக்தர்கள், வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்