சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரனார் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும் என அவரது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்கலந்துகொண்டு நாட்டு விடுதலைக்காகச் சிறை ஏகியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பெரும்போராட்டங்களை முன்னெடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பிறந்தநாள்.
கடந்த ஆண்டு, அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டது. அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: அடக்குமுறை சமூகத்தால் நிகழ்ந்த அவலங்களை நீக்க தனது ராணுவப் பணியை துறந்து பல லட்சியங்களுடன் பாடுபட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த தினத்தில், அவரது தியாகங்களை வணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.
» ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
» உலக பார்வை தினத்தையொட்டி குழந்தைகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்
துணை முதல்வர் உதயநிதி: விடுதலை வேட்கையோடு சிறை சென்றவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர் தியாகி இம்மானுவேல் சேகரனார்.அவரது பணிகளைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்
அதிமுக பொதுச் செயலாளர்பழனிசாமி: சமூக சீர்திருத்தத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் பாடுபட்டு உயிர்நீத்த தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் அவர்தம் பெரும் தியாகத்தை வணங்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்கவும் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய இம்மானுவேல் சேகரனாரின் புகழ் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவருக்கு எங்களது புகழஞ்சலி.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி: தியாகி இம்மானுவேல் சேகரனார் கண்ட சமத்துவ சமூகம் என்ற கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்.
விசிக தலைவர் திருமாவளவன்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் மகத்தான ஈகத்தை நினைவுகூர்ந்து அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தியாகி இம்மானுவேல் சேகரனார் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன்: தியாகி இம்மானுவேல் சேகரனாரின் தியாகத்தையும் போற்றுவோம்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இம்மானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றும் விதமாக நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago