சென்னை: திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறறம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பொருள் நடமாட்டம், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஸ்டாலினின் திமுக அரசைக்கண்டித்து அக்.8-ம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி அதிமுக 92-பி வட்டச் செயலாளர் என். ராஜா அவரது வட்டத்திலிருந்து திரளான பொதுமக்களை அழைத்துச் சென்று பங்கேற்றுள்ளார்.
பின்னர் அன்று மாலை சுமார்5.30 மணியளவில் ராஜா, தனதுஇருசக்கர வாகனத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பி.கே.புதூர், இந்திரா நகர் ரேஷன் கடை அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜாவின் வாகனத்தை மறித்து சர்வசாதாரணமாக, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளதன் காரணமாகவும், அரசியல் காரணமாகவும் ராஜாவுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், அதிமுக வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயலாளர் போகர் சி.ரவி மனித சங்கிலி போராட்டத்தின்போது, பேரூராட்சியின் அவலங்களை எடுத்துரைத்துள்ளார். இதன் காரணமாக நேற்று,பேரூராட்சி செயல் அலுவலரை வேலை நிமித்தமாக பார்க்க சென்ற ரவிவை, திமுக பேருராட்சி மன்றத் தலைவியின் கணவர் மற்றும்துணைத் தலைவர் மற்றும் சிலர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
இத்தாக்குதலில் காயமடைந்த ரவி சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை முதல்தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. திமுக அரசில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
இந்த ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. தாக்குதலுக்குள்ளான நிர்வாகிகள் அளித்த புகாரை பதிவு செய்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதிமுக 53-வது ஆண்டு தொடக்க விழா: நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.1 கோடியே 71 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். அவர்களுக்கு அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா நடைபெறும் அக்.17-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago