சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமியை யொட்டி இன்றும், நாளையும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன்படி மொத்தம் 2,700 பேருந்து களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று 700 பேருந்துகளும், நாளை 2 ஆயிரம் பேருந்துகளும் இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவை, கிளாம் பாக்கம், கோயம்பேடு, மாதவரம் போன்ற பகுதிகளில் இருந்து இயக்கப்படவிருக்கின்றன. இதைத் தவிரதமிழகத்தின் முக்கிய பகுதிகளில்இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.
முன்பதிவைப் பொறுத்தவரை இன்று தமிழகம் முழுவதும் பயணிக்க 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் சென்னையில் இருந்து பயணிக்க 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல், நாளை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பயணிக்கவும், ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக அதிகாரிகள் கூறும்போது,“பயணிகள் வசதிக்காக போதியபேருந்துகள் இயக்க திட்டமிட்டுள் ளோம். குறிப்பாக நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படும்.
» காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்: ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
» லாவோஸ் நாட்டில் பிரதமர் 2 நாள் சுற்றுப்பயணம்: ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
கோயம்பேட்டில் இருந்துஇயக்கப்படும்போது, இரவு 11 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். தற்போது கிளாம்பாக்கம் வருவதற்கான நேரத்தை கணக்கிட்டு 12 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே பயணிகள் தங்களுடைய பயணத்தை 12 மணிக்குஉள்ளாககிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கும் வகையில் திட்டமிட வேண்டும்” என்றனர்.
இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பயணிகள் கூறும்போது, “சென்னை யில் இருந்து திருநெல்வேலி செல்லகுறைந்தபட்சம் ரூ.1,500 கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
குடும்பத்தி னருடன் சென்றால் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் செலவிட வேண்டி யிருக்கிறது. படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பயணிக்க இவ்வளவு கட்டணம் என்றால் இருக்கையில் அமர்ந்து பயணிக்கவும் இதைவிட ரூ.200 என்றளவில் தான் கட்டணம் குறைவாக இருக்கிறது. கட்டண விவகாரத்தில் தக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் கூறும்போது, “அரசிடம் அனுமதிபெற்ற அட்ட வணையில் இடம்பெற்றிருப்பதற்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப் படுவதில்லை. அவ்வாறு நிர்ணயம் செய்பவர்கள் மீது சங்கம் சார்பில் புகாரளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago