அகில இந்திய அளவில் பழுதூக்கும் போட்டி: தமிழக காவல்துறைக்கு 14 பதக்கங்கள் - வெற்றியாளர்களுக்கு டிஜிபி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பளுதூக்கும் போட்டியில் தமிழக அணியினர் 14 பதக்கங்களை வென்று அசத்தினர். வெற்றியாளர்களை நேற்று நேரில் அழைத்து டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகள் (2024) கடந்த மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தின் துர்க் நகரில் நடைபெற்றது. இப்போட்டியை சத்தீஸ்கர் மாநில காவல்துறை நடத்தியது. இதில், தமிழ்நாடு காவல்துறை பளு தூக்கும் குழு (பளு தூக்குதல், வலு தூக்குதல், யோகா) சார்பில் 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழக காவல்துறை அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 14 பதக் கங்கள் பெற்று தமிழ்நாட்டுக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமைசேர்த்தது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற தமிழக போலீஸாரை, டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி னார்.

இந்நிகழ்வின்போது, கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், சட்டம் ஒழுங்கு ஏஐஜி நாதா, ஆயுதப்படை டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்