சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி 5-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ளார். அமைச்சரவையில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டு, 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 6 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், தொழில் முதலீட்டுக்கான அனுமதிகள், ஒப்புதல்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களில் கூடுதல் பயனாளிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட உள் ளது.
படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தும் நிலையில், அதுபற்றியும் விவாதித்து, முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago