நாமக்கல்: திருச்செங்கோடு அருகே 3 ஏக்கர் நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் பள்ளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி, பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்காடு கிராமத்தில் இவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் மா, கொய்யா, தேக்கு உள்ளிட்ட பலன் தரும் மரங்களை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது நிலத்தில் இருந்த மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். மேலும்,பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த வேலிகளும் அகற்றப்பட்டிருந்தன.
தகவலறிந்த செங்கோட்டையன், இதுதொடர்பாக திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, மரங்களை வெட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago