அணு உலை எதிர்ப்புக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வரை சந்திக்க முடிவு

கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வலி யுறுத்த வேண்டி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வுள்ளதாக, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்தார்.

ஈரோடு சித்தார்த்தா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீடு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் சுப. உதயகுமார் பங்கேற்றார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வ தாக கூறுகின்றனர். மே 26 முதல் ஜூன் 20-ம் தேதி வரை இந்த அணு உலைக்குள் 6 லட்சம் லிட்டர் டீசல் கொண்டு செல்லப்பட் டுள்ளது. அணு உலையில் இருந்து மின் உற்பத்தி செய்யும்போது டீசல் எதற்காக கொண்டு செல்லப்படு கிறது?.

அமெரிக்காவின் மொத்த மின் உற்பத்தியில் 15 சதவீதம் மட்டுமே அணு உலை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட அணு உலைகளை படிப்படியாக மூட முடிவு எடுத்துள்ளன. இந்தியாவில் 3 சதவீத மின்உற்பத்தி மட்டுமே அணுஉலை மூலம் நடக்கிறது. அணு உலைகளை அதிகரிக்க இந்தியா முயற்சிப்பது ஆபத்தா னது.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து கூடங் குளத்தில் 3, 4-வது அணு உலை அமைக்க இருப்பதாகவும், இந்த அணு உலையை பார்வை யிட வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளார். புதின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். கூடங் குளத்தில் 3, 4-வது அணு உலை களை அமைக்கக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இதற்கு ஆதரவு தரும்படி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறோம்.

இதுவரை சந்தித்த தலைவர் களில் பெரும்பாலானவர் கள் எங்களுக்கு ஆதரவு தந்துள்ள னர். ஆக.12-ம் தேதிக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.முகிலன், தமிழக பசுமை இயக்கத் தலைவர் வெ.ஜீவானந்தம், தமிழன பாதுகாப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் கி.வே.பொன்னை யன், பியுசிஎல் மாநில நிர்வாகி கண.குறிஞ்சி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்