சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
அதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக்கொடிகள் போன்றவை தயாரிக்கப்படு வதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது.
மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி விளம்பர பதாகைகள், முட்கரண்டி, கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்கள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக்தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்துள்ளது.
இதுவரை 240 தொழிற்சாலைகள் மூடல்: பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த, புகார்கள் அடிப்படையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அவ்வாறு இதுவரை 240 பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
» டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
» ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
குடியிருப்பு அல்லது வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் செயல்படும் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து பிளாஸ்டிக்உற்பத்தியாளர்களை கண்டறிவது சவா லாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் முற்றிலும் தற் காலிமாக செயல்பட்டு வருகின்றன.
எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் தடை செய்யப் பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அதிகாரிகளின் தொடர்பு எண் விவரங்கள் https://tnpcb.gov.in/contact.php என்ற வாரிய இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
புகார்களை தொலைபேசி எண், மின்னஞ்சல், கடிதம் வாயிலாக தெரிவிக்கலாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்புக்காக பாராட்டப்படு வார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago