சென்னை: சென்னை சென்ட்ரல் - திருப்பதி உட்பட 8 விரைவு ரயில்களில் தலா 2 பெட்டிகள் தற்காலிகமாக இணைந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் - திருப்பதி, திருப்பதி - சென்ட்ரல் சப்தகிரி விரைவு ரயில்களில் இன்று முதல் 15-ம் தேதிவரையில் தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இணைத்து இயக்கப்படும்.
கோவை - திருப்பதி விரைவு ரயிலில் நாளைமுதல் 15-ம் தேதி வரையிலும், திருப்பதி - கோவை விரைவு ரயிலில் நாளைமுதல் 16-ம்தேதி வரையிலும் தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.
திருப்பதி - எஸ்.எம்.வி.டி. பெங்களூரு விரைவு ரயிலில் அக்.4 முதல் 15-ம் தேதி வரையிலும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு - திருப்பதி விரைவு ரயிலில் அக்.5 முதல் 16-ம் தேதி வரையிலும் தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதியுள்ள முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்பட உள்ளது.
இதுபோன்று சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும் இன்று முதல் அக்.15-ம் தேதி வரை தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, இருக்கை வசதியுள்ள முன்பதிவு பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago