சென்னை: சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அக்.30-க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் சுமார் 14 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடமிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு அரையாண்டுக்கு ரூ.465 கோடிகுடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மூலம் வருவாய் கிடைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் மட்டும்,சொத்து உரிமையாளர்கள் காலத்தோடு சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் அக்.1 முதல் 30-ம் தேதிவரை சொத்து வரி, சென்னை குடிநீர்வாரியத்துக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை செலுத்துவோருக்கும் 5 சதவீதம் தள்ளுபடி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னைகுடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுதோறும் இருமுறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உரிய காலக்கட்டத்துக்குள் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக இன்று(அக்.1) முதல் அக்.30-க்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன்முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த 5 சதவீதம் ஊக்கத் தொகையானது நடப்பு கேட்புத் தொகைக்குமட்டுமே வழங்கப்படும். இம்முறையானது 2-வது அரையாண்டு தொடங்கும் நாளான இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 2024-25 நிதியாண்டின் 2-ம்அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அக்.30-ம்தேதிக்குள் முழுமையாக வாரியத்துக்கு செலுத்தி 5 சதவீதம் அல்லதுஅதிகபட்சமாக ரூ.1,500 தள்ளுபடி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago