சென்னை: மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589விபத்துக்களில் 11,106 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
5 சதவீத உயிரிழப்பு தடுப்பு: தமிழக காவல்துறையின் விழிப் புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக 5 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டி ருக்கிறது.
இதேபோல், நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக1 லட்சத்து 5,097 வழக்குகளும், சிக்னலில் நிற்காமல் சென்றதாக1 லட்சத்து 35,771 வழக்குகளும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 2 லட்சத்து 31,624 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1 லட்சத்து 13,270 வழக்குகளும் அதிக பாரம்ஏற்றி வந்ததாக 6,946 வழக்குகளும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74,013 வழக்குகளும் என மொத்தம் 6 லட்சத்து 66,721 வழக்குகள் பதிவாகின. மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 35 லட்சத்து 78,763 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியதாக 3 லட்சத்து 39,434 வழக்குகள் எனமொத்தம் 39 லட்சத்து 18,197 வழக்குகள் பதிவாகி உள்ளன.
» ரூ.84,000 பணம், பீருக்காக குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதி கைது
» ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தை காட்டி கொடுத்த ஈரான் உளவாளி
மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக 35 லட்சத்து78,763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு (ஆர்டிஓ) பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. 39,924 எண்ணிக்கையி லான ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago