சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் வழித்தடத்தில் கிண்டி ரயில் நிலையம் முக்கியமானதாக திகழ்கிறது. ஐ.டி. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இந்த ரயில் நிலையத்தின் அருகில் இருப்பதால், தினமும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ், இந்த ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு பன்னடுக்கு (மல்டிலெவல்) கார் பார்க்கிங் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதி காரிகள் கூறியதாவது: கிண்டி ரயில் நிலையத்தில் ரூ.13.50 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனிடையே, தனியார் பங்களிப்போடு இங்கு பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. இதற்கான, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளோம். மொத்தம் 5 அடுக்குகள் கொண்டதாக இந்த பார்க்கிங் அமைய உள்ளது.
கீழ் தளத்தில் வணிக வளாகம், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். மேல் பகுதிகளில், கார்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 150 கார்கள் வரை நிறுத்த முடியும். நான்கு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 இருக்கும். பணி ஆணை வழங்கி அடுத்த 6 மாதங்களில் பன்னடுக்கு கார் பாக்கிங் கட்டமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago