திருப்புவனம் / சென்னை: நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா கிராமமாக கீழடியை மத்திய சுற்றுலாத் துறை தேர்வு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 10-ம்கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்கு தமிழர்களின் 2,600 ஆண்டுகள் பழமையான நகரநாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், கீழடியில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், 31 ஆயிரம் சதுரஅடி பரப்பில்ரூ.18.43 கோடியில், பாரம்பரியசெட்டிநாடு கட்டிட வடிவிலான, உலகத் தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்தவெளி அகழ்வைப்பகமாக தமிழக அரசு மாற்றியுள்ளது. கீழடி பெருமை உலக அளவில் பரவியுள்ளதால் வெளிமாநிலம், வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, மற்ற சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இதனால் கீழடிக்கு தினமும் 1,500 பேர் சுற்றுலாவாக வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுற்றுலாத் துறை, தேசிய அளவில் கீழடியை சிறந்த பாரம்பரிய சுற்றுலா கிராமமாக தேர்வு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற சுற்றுலா தின விழாவில், கீழடிஊராட்சித் தலைவர் வெங்கடசுப்பிரமணியனுக்கு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விருது வழங்கி கவுரவித்தார்.
» குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 26 தமிழக பக்தர்கள் அக்.1-ல் சென்னை வருகை
» சொத்து வரி உயர்வு: சென்னை மாநகராட்சி தீர்மானத்துக்கு தலைவர்கள் கண்டனம்
இதுகுறித்து வெங்கடசுப்பிரமணியன் கூறும்போது, "கீழடியில் பாரம்பரிய விவசாயம், கோயில் திருவிழாக்களையும் நடத்துகிறோம். இதைக் காண அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கடந்த ஜனவரிமாதம், மத்திய சுற்றுலாத் துறையின் விருதுக்கு விண்ணப்பித்தேன். மொத்தம் 8 பிரிவுகளில் 33 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. பாரம்பரிய சுற்றுலாப் பிரிவில் தேசிய அளவில் 4 கிராமங்களைத் தேர்வு செய்தனர். அதில் கீழடி முதலிடத்தை பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்த, ஊராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.
அமைச்சர், முதல்வர் பதிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “மத்திய அரசின் சுற்றுலாத் துறை சார்பில், தேசிய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “உலகெங்கும் வாழும் தமிழர்களே கீழடிக்கு வருக, நம் வரலாற்றைப் பருக” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago