காவல் ஆணையரின் உத்தரவை மீறி செயல்பட்ட எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் போலீஸாரின் 'கண்டறிய முடியாத சான்றிதழை' (நான்-டிரேஸபிள் சர்ட்டிஃபிகேட்) பெற்று, பலர் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஏராளமான போலி பத்திரங்களை பதிவு செய்வதாகப் புகார்கள் வந்தன. எனவே, நான்-டிரேஸபிள் சான்று வழங்கும்போது கவனமாக இருக்குமாறு காவல் ஆணையர் என்.காமினி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், நிலப்பத்திரம் காணாமல் போனது தொடர்பாக ஒருவருக்கு நான்-டிரேஸபிள் சான்றிதழை வழங்கியதும், அதற்காகபணம் வாங்கிக்கொண்டு, காவல் ஆய்வாளருக்குப் பதிலாக, அவரே கையெழுத்திட்டதாகவும் காவல் ஆணையருக்குப் புகார்கள் சென்றன.

இதையடுத்து, உத்தரவை மீறி செயல்பட்ட எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்