கரூர்: திருப்பதி கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு சர்ச்சை தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிடும் நிகழ்வு இன்று (செப். 28) நடைபெற்றது.
கரூர் ரயில்வே குடியிருப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு இந்து முன்னணி கரூர் மாநகரத் தலைவர் கணேசன் தலைமையில் நகரச்செயலாளர் காமேஷ்வரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலையில் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயரிடம் முறையிட்டு 11 தேங்காய்களை உடைத்து முறையிட்டனர். இதில் நிர்வாகிகள், இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி 6 சாலை, லாலாபேட்டை ஆஞ்சநேயர் கோயில்களிலும் இந்த தேங்காய் உடைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் உள்ள கோயில்களில் இன்று மாலை தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago