டெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு: சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்ததுடன், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோருவதற்காக நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார். முன்னதாக, காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’’ எனஅப்போது முதல்வர் தெரிவித்தார். இதுதவிர, தமிழ்நாடு இல்லத்தில், முதல்வர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியசெயலாளர் டி.ராஜா சந்தித்துபேசினார். இந்த சந்திப்புகளின்போது, திமுக எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமருடனான சந்திப்புக்குப்பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வீட்டுக்கு முதல்வர் சென்றார். அங்குஅவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், யெச்சூரியின் மனைவி சீமா சிஸ்டி மற்றும் குடும்பத்தினரை சந்தித்துஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவாஆகியோர் இருந்தனர்.

இதையடுத்து, நேற்று மாலை 5.10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர்.

செந்தில் பாலாஜி சந்திப்பு: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். தொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் நேற்று காலை, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதியை செந்தில்பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய ஸ்டாலினை நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி சந்தித்தார். அப்போது முதல்வரின் காலில் விழுந்து வணங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்