ஸ்ரீவி., விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று (செப்.27) காலை 8 மணியளவில் சிற்றுந்து ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த மாடசாமி (29) வாசுராஜ் (16) நிதிஷ்குமார் (17); ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் சதிஸ்குமார் (20) என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்