தமிழகத்தில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு தனி ஓய்வறை: ரூ.8.55 கோடியை 3 வாரத்தில் வழங்க நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு தனி ஓய்வறை கட்ட ரூ.8.55 கோடியை 3 வார காலத்தில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் முறையாக பராமரிக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தனர்.

முறையாக பராமரிப்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் உள்ள 170 அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக நாப்கின் தடையின்றி சப்ளை செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது. இதேபோல சுமார் 5,900 அரசு பள்ளிகளிலும் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ளன. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் மாணவிகளுக்கு ஓய்வறை கட்டுவதற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 8.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த தொகையை தமிழக அரசு 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும், சானிட்டரி நாப்கின் இயந்திரங்களின் செயல்பாடு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்