சென்னை: திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னைநுங்கம்பாக்கம் காம்தார் நகர்பிரதான சாலைக்கு, ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர்சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு சிலதினங்களுக்கு முன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன்எஸ்.பி.பி. சரண் வந்தார். அப்போது அவர், தங்கள் இல்லம் அமைந்துள்ள தெருவுக்கோ அல்லது நகருக்கோ தனது தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட வேண்டும் என்று மனு அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு நேற்று அரசு வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்து, திரைப்படங்களில் நடித்து, பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றுள்ளதுடன், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அன்புக்குரியவர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 2020 செப்.25-ம் தேதி அன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்காஇடம் பெற்றவர் அவர். தமிழ்த் திரையுலகுக்கு அவர் ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு, ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago