சென்னை: உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா மாவட்டவாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, தமிழகம் முழுவதும் பாஜகவின் அமைப்புரீதியான 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, அவரது சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் நேற்று தொடங்கியது. இதையடுத்து, இன்றும், செப்.26, 27-ம் தேதிகளிலும் சென்னையில் ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அக்.17-ம் தேதி கோவைமற்றும் நீலகிரியில் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்து நடத்த கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago