தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும், நிதியும் வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும் நிதியும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும், நிதியும் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களின் செயல்பாடுகளை முடக்குகிற கொள்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.அதிகாரங்களை பரவலாக்குவதற்குப் பதிலாக மையப்படுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 73 மற்றும் 74-வது சட்ட திருத்தங்களின் அடிப்படையில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 29 அதிகாரங்களும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 18 வகை அதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆனால் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கைதிகளை போல்நடத்தப்படுகின்றனர். ஒரு சாதாரணசெலவு செய்ய வேண்டும் என்றால் கூட அதிகாரிகளின் ஒப்புதலை பெறவேண்டி உள்ளது.

30 சதவீதம் உயர்த்த வேண்டும்: இதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழகஅரசு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். தமிழக அரசு தனதுவருவாயில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது வழங்கி வரும்10 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

கிராம ஊராட்சி பொது நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கிராமஊராட்சியே அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பல ஊராட்சிகளை இணைத்துநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. ஊராட்சிகளின் உரிமைகளும், சலுகைகளும் பறிக்கப்படுகின்றன. ஊராட்சிகளை இணைப்பதற்கு முன் அவர்களுடைய கருத்தை கேட்க வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில்ஊராட்சிகளே இல்லாத நிலை உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விசிக துணைப் பொது செயலாளர் வன்னியரசு, தமிழக காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் ராம்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்