தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து இன்றுமுதல் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதனால் மீன்கள் வரத்து அதிகரித்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டது. இத்தடை நேற்றுடன் (ஜூன் 14) முடிவடைந்தது. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க இன்று அதிகாலை முதல் கடலுக்குச் செல்கின்றனர்.
முன்னதாக இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து செய்தனர். இப்பணிகளை வியாழக்கிழமையுடன் முடித்து படகுகளை கடலின் ஆழமான பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தினர்.
படகுகளில் டீசல் கேன்கள், ஐஸ் கட்டிகள், வலைகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட படகுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர். 2 மாதங்களாக வருமானம் இன்றி தவித்த மீனவர்கள் தற்போது அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குச் செல்கின்றனர். இவர்கள் சனிக்கிழமை அதிகாலை கரைக்கு திரும்புவார்கள். இதையடுத்து மீன்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago