போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டுதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை சார் அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நலன் கருதி, அவர்கள் பணிக்காலத்தில் இறக்கும்பட்சத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில்வங்கிகளுடன் கலந்தாலோசிக்கப் பட்டது. அதனடிப்படையில், கனரா வங்கியில் ஊதியம் பெறுவதற்கான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்கெனவே கனரா வங்கி அளித்துள்ள சலுகைகளுடன், பணியில் இருக்கும்போது பணியாளர் இறக்கும்பட்சத்தில் அவர் குடும்பத்துக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.3 லட்சம், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் பெறுவோருக்கு ரூ.4 லட்சம், ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ரூ.1.50 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் காப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற ஏற்கெனவே கனரா வங்கியில் ஊதியம் பெறுவதற்கான வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள்வங்கி கணக்கை சிறப்பு வங்கி கணக்காக மாற்றியமைக்க வேண்டும். இதர வங்கியில் ஊதிய கணக்கு வைத்திருப்பவர்களும் கனரா வங்கியில் கணக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்