“ஒரு வாரத்தில் தவெக மாநாட்டுப் பணி தொடக்கம்” - புஸ்ஸி ஆனந்த் அப்டேட்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் கலந்து கொள்வோரின் விவரங்களை தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார் என்று அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடிகர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலொசனை நடத்தயதை தொடர்ந்து . விக்கிரவாண்டி அருகே வருகின்ற 23ம் தேதி தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடத்த அனுமதி வேண்டி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அன்றே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி அப்போதைய விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு அனுப்பிய கடிதத்தில், 21 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கான பதிலை செப்டம்பர் 6ம் தேதி தவெக சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி மாநாடு நடத்திக்கொள்ள காவல் துறை 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இந்நிலையில், செப்டம்பர் 23-ல் மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து நேற்று மாநாடு தேதியை நடிகர் விஜய் அக்டோபர் 27-க்கு மாற்றி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேடை அமைப்பது, பேரி கார்டு அமைப்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அறிவித்தபடி வருகின்ற அக்டோபர் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும். மாநாடு பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும். இம்மாநாட்டில் கலந்து கொள்வோரின் விவரங்களை முறைப்படி தலைவர் விஜய் அறிவிப்பார்” என்று அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE