“இந்திய வரலாற்றை மாற்றியமைத்த ஜான் மார்ஷலுக்கு நன்றி” - முதல்வர் ஸ்டாலின்

By கி.கணேஷ்

சென்னை: நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மிகச் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரீகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷலின் பங்களிப்பை நன்றிப் பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.

சிந்துவெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புப்படுத்தினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர் ஜான் மார்ஷலின் முழு உருவச் சிலையை தமிழகத்தில் நிறுவி கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் தனது பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE