இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரைபிசிசிஐ உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தலைமை தாங்கினார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேச மக்களை பாகிஸ்தான் கொடுமைப்படுத்தியபோது, இந்திய ராணுவம் அங்குசென்று வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கிக்கொடுத்தது. அப்போது 26 சதவீதம் இந்துக்கள் அங்கு இருந்தார்கள். தற்போது, அங்கு 7 சதவீதஇந்துக்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வங்க தேசத்துடன் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்துவது வெட்கக்கேடானது. உடனடியாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, கிரிக்கெட் போட்டி தொடரை தடை செய்யக் கோரிய கோரிக்கை மனுவை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் இந்து மக்கள் கட்சியினர் வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE