உதகையில் நீர் பனிப் பொழிவு தொடக்கம்: கடும் குளிரால் மக்கள் அவதி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீர் பனி மற்றும் உரை பனி தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்த நிலையில் தற்போது பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. இன்று உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனி கொட்டியது.

நீர் நிலைகள் அருகே உள்ள புல்தரை மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, ரேஸ் கோர்ஸ் மைதானம், படகு இல்லம், போன்ற இடங்களில் நீர் பனி அதிகமாக காணப்பட்டது.

அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. நீர் பனி காரணமாக கடும் குளிர் நிலவுவதால் நெருப்பை மூட்டி உதகை பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE