“புதுச்சேரியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மாநில அந்தஸ்தே தீர்வு” - முதல்வர் ரங்கசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “புதுவையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அந்தஸ்து ஒன்றே தீர்வாக அமையும். அதனால் டெல்லி செல்லவுள்ளேன்” என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் இன்று (செப்.18) நடைபெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:“மத்திய உள்துறை அமைச்சகச் செயலர் புதுச்சேரிக்கு வருகைதர உள்ளார். அவர் கூட்டத்தை கூட்டி ஆய்வு மேற்கொள்கிறார். என்னையும் சந்திக்கிறார். மின்கட்டண உயர்வை ஈடுகட்டும் வகையில் பொதுமக்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2 மாதங்களுக்கு சேர்த்து மின்கட்டண மானியம் வழங்கப்படும். மின்கட்டண ரசீதில் மானியத் தொகை கழிக்கப்படவுள்ளது. அரசியல் லாபத்துக்காகவே எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளன. புதுவையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மாநில அந்தஸ்துதான் ஒரே தீர்வாக அமையும். மாநில அந்தஸ்து பெறுவதற்காக டெல்லிக்கு செல்லவுள்ளேன். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவைக்கான உரிமைகளைப் பெறுவதற்கு மாநில அந்தஸ்து தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE