சென்னை: பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர், முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் மோடியின் பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அவரது புரட்சிகரமான தலைமையின் கீழ், தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மீது அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் தேசத்துக்கான அவரது தொலைநோக்கு தலைமை என்றும் தொடர பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நிலைத்த உடல் நலத்துடன் திகழ்ந்திட விழைகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் தொடர்ந்து பொது சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
» அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகினார்: டெல்லி முதல்வர் ஆகிறார் ஆதிஷி - விரைவில் பதவியேற்பு விழா
» ஜம்மு காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: கல்வியறிவு, தொழில்நுட்பம், விவசாயம், தொழில்வளம் என ஒவ்வொரு துறையிலும் தனி கவனம் செலுத்தி, உலகின் சக்திவாய்ந்த தேசமாக இந்தியாவை கட்டமைக்க முழு பங்களிப்பை நல்கி வரும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மூன்றாவது முறையாக வலிமையான பிரதமராக நம் நாட்டுக்கு வலிமை கூட்டி, உலகுக்கு வழிகாட்டி, வலம் வந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளில் அவருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நாட்டை வழிநடத்த வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த்: பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்.
தவெக தலைவர் விஜய்: பிரதமர் மோடிக்கு என்னுடைய இதயப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் எப்போதும் அவருக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: பிரதமர் மோடிக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 3-வது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலத்துடன் பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டுக்கு சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பிரதமர் மோடி சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுடன் நமது தேசத்துக்கு தொடர்ந்து சேவை செய்ய இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன். இந்நாள் அவரது புகழ்பெற்ற பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆண்டின் தொடக்கத்தை குறிக்கட்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago