சாம்ஸங் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: முதல்வர் தலையிட்டு தீர்வுகாண பாஜக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் தி.நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்ஸங் நிறுவன தொழிலாளர்கள் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கவலைக்குரியது. சிஐடியு தொழிற்சங்கத்தின் தூண்டுதல் காரணமாக இந்த வேலைநிறுத்தம் நடந்து வருகிறது, 1,800-க்கும் மேற்பட் டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள இந்நிறுவனத்தின் பணிகளை இந்த வேலைநிறுத்தம் முடக்கியுள்ளது.

வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் இந்திய சட்ட திட்டங்களை மதித்து அதன்படியே தங்களது இயக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தொழிற்சங்கங்கள் என்றபோர்வையில் உற்பத்திக்கு பாதிப்புஏற்படுத்தும் முயற்சியில் சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் ஈடுபடுவது வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை பெருமளவில் தடுக்கும். குறி்ப்பாக உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தப்போராட்டம் கடுமையான விளைவுகளை ஏற் படுத்தும்.

வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீடுகளைஈர்த்து வருவதாக சொல்லிக்கொள் ளும் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சாம்ஸங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெற வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE