மதுரை தீ விபத்தில் காயமடைந்த விடுதி காப்பாளரும் உயிரிழப்பு - பலி 3 ஆனது

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் காயடைந்த விடுதி மேலாளரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்ட 'விசாகா' என்ற தனியார் மகளிர் விடுதியில் 12-ம் தேதி ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் விடுதியில் தங்கியிருந்த அரசுப் பள்ளி ஆசிரியை பரிமளா சவுந்தரி (56), தனியார் கல்லூரி ஆசிரியை சரண்யா (27)ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஜனனி என்ற மாணவி விடுதி காப்பாளர் புஷ்பா (55) உட்பட 3 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சையில் இருந்த புஷ்பா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிந்தார். இத்துடன் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. ஏற்கெனவே இந்த தீ விபத்து குறித்து புஷ்பா மீது திடீர்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்