புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (செப்.18) முழு அடைப்புப் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஆகஸ்ட் 16-ல் இருந்து மின் கட்டண உயர்வு முன் தேதியிட்டு அமுலுக்கு வந்துள்ளது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (செப்.18) முழு அடைப்புப் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் செப்.18 அன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளன. எனினும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளி, கல்லூரிக்கு வருவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது" என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago