107-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமசாமி படையாட்சியாருக்கு தலைவர்கள் மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி, ஹால்டா சந்திப்பு அருகில் அமைந்துள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு கீழே அவரதுஉருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் மரியாதை: ராமசாமி படையாட்சியாரின் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் அதிமுகநிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் எம். கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அமமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.

ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தி: விடுதலைப் போராட்ட வீரரும்,பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக நாடு விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவருமான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி நிறுவனர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்த நாளில் அவரது பணிகளையும், சிறப்புகளையும் போற்றுவோம் வணங்குவோம். இதேபோன்று, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்