புதுச்சேரி: மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை (செப்.16) நடக்கும் உண்ணாவிரத்தில் பங்கேற்க விசிக அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிமுக அழைப்பு விடுத்துள்ளதால் இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் மதுஒழிப்பு மாநாட்டை அக்டோபர் 2-ல் நடத்துகிறது. மாநாட்டில் அதிமுக பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை எதிர்த்து நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இந்த உண்ணாவிரத்ததில் பங்கேற்க வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்றார். அங்கு கட்சியின் முதன்மைச் செயலர் தேவபொழிலனை சந்தித்து அழைப்பு விடுத்தார். இப்போராட்டத்தில் விசிக பங்கேற்பது பற்றி கட்சி மேலிடத்தில் கேட்டு புதுச்சேரி விசிக தரப்பு முடிவு எடுக்கவுள்ளது.
» முத்ரா கடன் | “அமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளிவிவர மோசடி” - செல்வப்பெருந்தகை
» புதுச்சேரி ராஜ்நிவாஸ்: புதிய வசதிகள் அமைக்க ரூ.3.88 கோடியில் பூமிபூஜை செய்த முதல்வர்
இதனால் புதுச்சேரியிலும் இண்டியா கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago