புகையிலை தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புகையிலை பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் சிகரெட் ஆகியவை பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதுடன், மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும். இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லாத வளாகமாக மாற்ற, மத்திய சுகாதாரத் துறை திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், கல்வி நிறுவனங்களில் உள்ள கடைகளுக்கான கட்டுப்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அதைப் பின்பற்றி, அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களை புகையிலை, எலெக்ட்ரானிக் சிகரெட் இல்லாத மையமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE