உதகை: நீலகிரி மாவட்டத்தில் 1,194 பேர் தேர்வு எழுதவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வை முழுவதுமாக கண்காணிக்கும் வகையில், 3 கண்காணிப்புக் அலுவலர்களும், 4 பறக்கும் படைக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வை நீலகிரி மாவட்டத்தில் பேர் எழுதினர். 1,194 பேர் தேர்வு எழுதவில்லை. நீலகிரி மாவட்டம், உதகை வுட்சைடு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி குரூப்-2 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியது: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி குரூப்-2 தேர்வானது, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 வட்டங்களில் 12 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுத 3,585 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை முழுவதுமாக கண்காணிக்கும் வகையில், 3 கண்காணிப்புக் அலுவலர்களும், 4 பறக்கும் படைக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல் ஆகிய பணிகளுக்காக 7 இயக்கக் குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் மற்றும் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்துதரப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை எழுத 3,585 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 2,391 மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். எஞ்சிய 1,194 பேர் இத்தேர்வை எழுதவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago