சென்னை: விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடப்பதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம்22-ம் தேதி கட்சியின் கொடி,பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும்கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக, பலரிடமும்கருத்து கேட்கப்பட்டு கட்சியின்கொள்கைகளை அவர் வகுத்துவருவதாகவும், அந்த பணிகள்இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாநாடு நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தவிஜய், நிறைவாக விக்கிரவாண்டியை தேர்வு செய்தார். அங்கு செப்.23-ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி காவல் துறையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி மாநாடு நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து கேட்டபோது, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
மாநாட்டுக்கு இடையூறு வரும்என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால், பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். பொதுச் செயலாளர் ஆனந்த் ஒருவரால் மட்டுமே எல்லா வேலைகளையும் பார்க்க முடியாது. எனவே, சில முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மாநாட்டு பணிக்காக தனி குழு அமைத்திருக்க வேண்டும். வேலையை பகிர்ந்து கொடுத்திருக்க வேண்டும். இன்னும் 10 நாட்கள் மட்டுமேஉள்ள நிலையில், இதுவரை எந்த பணியும் தொடங்கப்படவில்லை. இதுபற்றி கேட்டால், ‘‘தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்ததிட்டமிடலும் வேண்டாம். அதுவரை நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருங்கள்’’ என்கின்றனர்.இதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநாடு அக்டோபருக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஒரு தரப்பினரும், மழைக்காலம் நெருங்குவதால் 2025 ஜனவரியில் நடத்ததலைமை திட்டமிட்டு வருவதாகஒரு தரப்பினரும் கூறுகின்றனர். இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகளிடம் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago