மதுரை: மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜகஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.
மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago