சென்னை: விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், விஜய்யின் கட்சியை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையே, கட்சியின்முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த விஜய் முனைப்பு காட்டி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்நிலையில், மாநாட்டுஏற்பாடுகள் தொடர்பாக முக்கியநிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.
மாவட்ட வாரியாக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் விவரங்களை சேகரிப்பது, மாநாட்டுக்கு வருவோருக்கு உணவு ஏற்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டப்பேரவை தொகுதி வாரியாகதொண்டர்களை மாநாட்டுக்குஅழைத்து வருவதற்கு அமைக்கப்பட்ட பொறுப்பாளர்கள், குழுஉறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க நிர்வாகிகளை விஜய் கேட்டுக்கொண்டார்.
முன்னேற்பாடு பணிகளை இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள், அதுதொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தலைவர்களுடன் விஜய் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago