மதுரை: ‘அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல அரசின் தூதுவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,874 கோடியில் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 12,233 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை யா.ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமைவகித்தனர்.
இவ்விழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியதாவது: அரசு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் அரசுஎப்படி செயல்படுகிறது என்பதை தேர்தல் என்ற தேர்வு, போட்டி மூலம்மக்களாகிய நீங்கள் ஆசிரியர்களாக இருந்து மதிப்பெண்கள் போடுவீர்கள். அந்த வகையில் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களவைத் தேர்தலில் நற்சான்றிதழாக 40-க்கு 40 தொகுதியில் வெற்றி பெறச் செய்து 100 சதவீத தேர்ச்சியை அளித்துள்ளீர்கள்.
அந்த வெற்றி, இன்னும்கூடுதலாக உங்களுக்காக உழைக்கவேண்டும், நிறைய திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பை அதிகப்படுத்தி உள் ளது. அரசின் சேவைகளை தேடிச் சென்ற காலம்போய், அரசே தேடி வந்து திட்டங்களை, நலத்திட்ட உதவிகளை திராவிட மாடல் ஆட்சி வழங்கிக்கொண்டிருக்கிறது.
ரூ.35 ஆயிரம் கோடி கடன் இலக்கு: சென்ற ஆண்டு ரூ.30 ஆயிரத்து75 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டது. தற்போது ரூ.35 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை ரூ.14 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் குழுக்களுக்கு ரூ.2,900 கோடியை வழங்கியிருக்கிறோம்.
பல ஆண்டுகளாக வசிக்கும் வீடுகளுக்கு பட்டாக்கள் இல்லை என்பதை அறிந்து, மதுரையில் 12 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கியிருக்கிறோம். பட்டா பெற்றமக்கள் அனைவரும் இனி நிம்மதியாக தூங்கலாம். இன்றிலிருந்து உங்களது வீடு சட்டப்பூர்வமானது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழகப் பெண் கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.
எங்களுக்கு எப்படி தமிழக முதல்வர் தூதுவராக உள்ளாரோ, அதேபோல், திராவிட மாடல் அரசின் தூதுவராக மக்களாகிய நீ்ங்கள் (பெண்கள்) இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். இங்கு வழங்குவதுவெறும் கடன் தொகை கிடையாது. வங்கிக் கடன் இணைப்புப்பெற்றுள்ள பெண்கள், 4 பேருக்குவேலைவாய்ப்பை கொடுக்கும் தொழில்முனைவோராக வேண்டும். திராவிட மாடல் அரசும், முதல்வரும் உங்களுக்கு எப்போதும் ஆதர வாக இருப்போம், இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், தங்கத் தமிழ்ச்செல்வன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago