வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, வீடுகளில் வைத்து வழிபட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் நேற்று கடலில் கரைத்தனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

இதேபோல், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் 1,519 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வீதிகளில் பிரதிஷ்டை செய்துவழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், பொதுமக்களும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்துவழிபட்டனர்.

2-வது நாளாக... வழிபாடு முடிந்த நிலையில், வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை சென்னையில் நீர்நிலைகளில் கடந்த 2 நாட்களாகக் கரைத்து வருகின்றனர்.

ஏற்கெனவே, சென்னையில் விநாயகர் சிலைகள் 11-ம் தேதி, 14மற்றும் 15-ம் தேதிகளில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகில், ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கபோலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர். தற்போது, வீட்டில் வைத்து வழிபட்ட களிமண் சிலைகள் மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் 2-வது நாளாக நேற்று கடலில் கரைத்தனர்.

அந்த வகையில், திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் 100-க்கும்மேற்பட்ட களிமண் சிலைகள், 10-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து பொதுமக்கள் கடலில் கரைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்